| #1 |
அகர |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #2 |
அடக்கம் |
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #3 |
அடைக்கலம் |
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செ…
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #4 |
அடைக்கலம் |
பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவு…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #5 |
அநித்தியம் |
கண்டதெல்லாம் அநித்தியமே
கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே
நீர் களித்ததெல்லாம் வீணே
உண்டதெல்லாம் மலமே
உட்கொண்டதெல்லாம் குறையே
உலகி…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #6 |
அரங்கம் |
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
…
|
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் |
No File
|
|
| #7 |
அருள் |
ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துட…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #8 |
அருள் |
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்று அருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனைஆளும்
கங்கா நாய…
|
சுந்தரர் |
No File
|
|
| #9 |
அருள் |
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #10 |
அருள் |
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #11 |
அருள் |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #12 |
அருள் |
எல்லா மிருந்தாலும் பசுவே
ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே பசுவே
எண்ணிப் பணிவாயே.
|
இடைக்காட்டுச் சித்தர் |
No File
|
|
| #13 |
அருள் |
ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துட…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #14 |
அருள் |
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப்
பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில்
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் …
|
பட்டினத்தார் |
No File
|
|
| #15 |
அருள் |
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #16 |
அறிவு |
தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே
|
அப்பர் பெருமான் |
No File
|
|
| #17 |
அறிவு |
தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
|
ஒளவையார் |
No File
|
|
| #18 |
அறிவு |
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி குதம்பாய்
அறிவு பெரிதாமடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #19 |
அறிவு |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #20 |
அறிவு |
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #21 |
அறிவு |
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அ…
|
தொல்காப்பியர் |
No File
|
|
| #22 |
அறிவு |
செத்திடமும் பிறந்நிடமும் இனிச்சாகா திருந்நிடமும்
அத்தனையும் அறியாதா ரறியுமறி வெவ்வறிவோ
ஒத்தனிலத் தொத்தபொரு ளொருபொருளாம் பெரும்பயனை
…
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #23 |
அவதாரம் |
அவதாரம் செய்து கலியுகம் ஐயாயிரத்துக்குப் பின் எழுந்து வருகின்ற வீரபோக வசந்தராயரவர்கள் - கருணா மூர்த்தியராகியும், மரணத்தை வென்றவர்களாகியும்…
|
ஸ்ரீ வீரப் பிரம்மம் |
No File
|
|
| #24 |
அவதாரம் |
தீமை மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பேன்.
|
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா |
No File
|
|
| #25 |
அவதாரம் |
இதே யுகமுடிவு நாளையிலே மற்றொரு புத்தர் தோன்றுவார் ....மெய்யென்னும் ஒரு மதத்தை ஸ்தாபிக்க வரும் மைத்ரேய புத்தர்....
|
ஸ்ரீ புத்தர் |
No File
|
|
| #26 |
அவதாரம் |
.... இறுதிப் பிரளயத்திற்கு முன் - அல் மஹதி அவர்கள் ஹிஜ்ரி 1300 க்கு மேல் எனது குலத்திலேயேதான் வந்து பிறப்பார்கள் ....
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #27 |
அவதாரம் |
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #28 |
அவதாரம் |
சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #29 |
அவதாரம் |
சாதுக்களை ரட்சிப்பதற்காகவும் தீயோர்களை அழிப்பதற்-காகவும் அவ்வப்போது நான் பூமியில் அவதரிக்கின்றேன்.
|
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா |
No File
|
|
| #30 |
ஆதி |
ஆதியிலே நாதம் இருந்தது, அந்த நாதம் தேவனிடத்தி-லிருந்தது, அந்த நாதம் தேவனாயிருந்தது. அந்த நாதம் மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினால…
|
இயேசுபிரான் |
No File
|
|
| #31 |
ஆதி |
எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்க…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #32 |
ஆதி |
ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வஜீவ னானபின்
ஆதியோடு கூடிமீண் டெழுந்தசென்ம மானபின்
சோதியான ஞானியாருஞ் சு…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #33 |
இறைமாட்சி |
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #34 |
இறைவன் எங்கே? |
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே
புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #35 |
இறைவன் எங்கே? |
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல்
சாத்திரப்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #36 |
இறைவன் எங்கே? |
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இ…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #37 |
இறைவன் எங்கே? |
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒ…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #38 |
இறைவன் எங்கே? |
தேவன் எங்கள் சேனாதபதியாய் எங்களோடகூட இருக்கிறார்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #39 |
இறைவன் எங்கே? |
ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்…
|
பாம்பாட்டிச் சித்தர் |
No File
|
|
| #40 |
இறைவன் எங்கே? |
ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ
எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம்இட்ட யவ்வில…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #41 |
இறைவன் எங்கே? |
எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார்
எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #42 |
இறைவன் எங்கே? |
சாணகத்துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறிவாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே
|
திருமூலர் |
No File
|
|
| #43 |
இறைவன் எங்கே? |
நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல்
ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமு…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #44 |
இறைவன் எங்கே? |
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எ…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #45 |
இறைவன் எங்கே? |
பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை
அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே.
|
பாம்பாட்டிச் சித்தர் |
No File
|
|
| #46 |
இறைவன் எங்கே? |
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #47 |
இறைவன் எங்கே? |
உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே
காரணமாய் வந்தான்டி. 198
அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தா…
|
அழுகணிச் சித்தர் |
No File
|
|
| #48 |
இறைவன் எங்கே? |
எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி.
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து.
கரும்பினிற் கட்டி…
|
ஒளவையார் |
No File
|
|
| #49 |
இறைவன் எங்கே? |
என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்?
உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே!
|
பட்டினத்தார் |
No File
|
|
| #50 |
இறைவன் எங்கே? |
அண்டவாச லாயிரம்ப்ர சண்டவா சலாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #51 |
இறைவன் எங்கே? |
னினைவெதுவோ வதுதானே சீவனாகு
னினைவெதுவோ வதுதானே யீசனாகு
னினைவெதுவோ வதுதானே சகமுமாகு
னினைவெதுவோ வதுதானே மனதுமாகு
னினை…
|
ரிபுகீதை |
No File
|
|
| #52 |
இறைவன் எங்கே? |
அவன் உன்னை விட்டு விலகுவதும் இல்லை
உன்னைக் கைவிடுவதும் இல்லை
|
இயேசுபிரான் |
No File
|
|
| #53 |
இறைவன் எங்கே? |
பக்தா! நீ என்னை எங்கே தேடுகிறாய்? நான் தான் உன் அருகில் இருக்கிறேனே. என் ஊர், கோட்டைக்குள் (உடற்கோட்டை) இருக்கிறது
|
கபீர்தாசர் |
No File
|
|
| #54 |
இறைவன் எங்கே? |
எந்த ஒரு அரிய மாணிக்கத்திற்காக நீங்கள் திருத்தல யாத்திரை புரிகிறீர்களோ, அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது
|
குருநானக் |
No File
|
|
| #55 |
இறைவன் எங்கே? |
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #56 |
இறைவன் எங்கே? |
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
பாரும்இத்தை உ…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #57 |
இறைவன் எங்கே? |
கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே ந…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #58 |
இறைவன் எங்கே? |
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #59 |
இறைவன் எங்கே? |
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்ப…
|
திருநாவுக்கரசர் |
No File
|
|
| #60 |
இறைவன் எங்கே? |
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
ச…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #61 |
இறைவன் எங்கே? |
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டத…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #62 |
இறைவன் எங்கே? |
செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #63 |
இறைவன் எங்கே? |
மலரில் மணம்போல் உன் பிரபு உன் உள்ளே இருக்கிறார்.
நீயோ கஸ்தூரிமான்போல் மீண்டும், மீண்டும் புல்லில் தேடுகிறாய்
|
கபீர்தாஸர் |
No File
|
|
| #64 |
இறைவன் எங்கே? |
ஜீவான்மாவில் இராமன் குடிகொண்டிருக்கிறான்
இந்த ஜீவான்மாவும் இராமனிடம் குடி கொண்டிருக்கிறது
|
குருநானக் |
No File
|
|
| #65 |
இறைவன் எங்கே? |
வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடி வைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற …
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #66 |
இறைவன் எங்கே? |
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #67 |
இறைவன் எங்கே? |
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
|
தாயுமான சுவாமிகள் |
No File
|
|
| #68 |
இறைவன் எங்கே? |
ஆடுகொண்டு கூடுசெய்து அமர்ந்திருக்கும் வாறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #69 |
இறைவன் எங்கே? |
காணவேண்டு மென்று நீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணுமென்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்றசீவ…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #70 |
இறைவன் எங்கே? |
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனித…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #71 |
இறைவன் எங்கே? |
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே
செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் ம…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #72 |
இறைவன் எங்கே? |
உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை
|
கடுவெளிச் சித்தர் |
No File
|
|
| #73 |
இறைவன் எங்கே? |
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்
புல்லறி வாகுமடி - குதம்பாய்
புல்லறி வாகுமடி
கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன் …
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #74 |
இறைவன் எங்கே? |
மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி
|
ஒளவையார் |
No File
|
|
| #75 |
இறைவன் எங்கே? |
நலிதரு சிறிய தெய்வமென்று அய்யோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதரு ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்ட…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #76 |
இறைவன் எங்கே? |
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #77 |
இறைவன் எங்கே? |
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #78 |
இறைவன் எங்கே? |
ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!
உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறு…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #79 |
இறைவன் எங்கே? |
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
போகாது மூடர்க்கென்று ஆடா…
|
பாம்பாட்டி சித்தர் |
No File
|
|
| #80 |
இறைவன் எங்கே? |
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #81 |
இறைவன் எங்கே? |
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திர…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #82 |
இறைவன் எங்கே? |
செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின்
அம்பலம் நிற…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #83 |
இறைவன் எங்கே? |
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #84 |
இறைவன் எங்கே? |
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி…
|
திருமூலர் |
No File
|
|
| #85 |
இறைவன் ஒருவரே |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே
|
திருமூலர் |
No File
|
|
| #86 |
இறைவன் ஒருவரே |
இறைவன் ஒருவனே, இறைவன் உன் அருகில் தான் இருக்கிறான். எட்டமுடியாதவன் என்று நினையாதே. அவன் ஒருவனே எல்லாப் படைப்புகளிலும் பரந்துளன்
|
குருநானக் |
No File
|
|
| #87 |
இறைவன் ஒருவரே |
எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்க…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #88 |
உடம்பின் பயன் |
உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்
ஒருபயன் ஆவது உடம்பின் பயனே
தருபயனாம் சங்கரனைச் சார்
மாசற்ற கொள்கை மனத்தி…
|
ஒளவையார் |
No File
|
|
| #89 |
உடல் அழியாமை |
ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி
தேகமழியாத நற்பாகம் படைத்த மா சித்தர்களனந்தங்கோடி
|
குணங்குடி மஸ்தான் சாஹிபு |
No File
|
|
| #90 |
உடல் அழியாமை |
கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே.
|
பாம்பாட்டிச் சித்தர் |
No File
|
|
| #91 |
உடல் அழியாமை |
தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
ஏகசி…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #92 |
உடல் அழியாமை |
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு.
அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு.
தீயாக வுள்ளே தெள…
|
ஔவையார் |
No File
|
|
| #93 |
உடல் அழியாமை |
விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவருரை கேட்டும் இரேன் மெய் கெடாதநிலை
தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட் டேன்தொல்லை நான்மறைக்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #94 |
உடல் அழியாமை |
ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி
தேகமழியாத நற்பாகம் படைத்த மா சித்தர்களனந்தங்கோடி
|
குணங்குடி மஸ்தான் சாஹிபு |
No File
|
|
| #95 |
உடல் அழியாமை |
அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹராமாக்கிவிட்டான். (இறைநேசர்களான ஒலிமார்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய்விட…
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #96 |
உடல் அழியாமை |
நபிமார்களின் உடலை பூமி தின்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான்
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #97 |
உடல் அழியாமை |
அழிவுள்ளதாகிய இது (இந்த சரீரம்) அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது (இந்த சரீரம்) சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக வி…
|
இயேசுபிரான் |
No File
|
|
| #98 |
உடல் அழியாமை |
தானென்ற பூசையது செய்தாயானாற்
சடலமது அழியாது கெவுனம்பாயும்
ஊனென்ற உயர்நிலையைத் தெரியவேணும்
ஊணுவது அங்கென்று உரைக்கவேணும்
கானெ…
|
கணநாதர் |
No File
|
|
| #99 |
உடல் அழியாமை |
சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி
சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே
|
அகப்பேய்ச் சித்தர் |
No File
|
|
| #100 |
உடல் அழியாமை |
ஓதியே அதிலிருந்து பூசைசெய்தால்
ஒருநாளு மழியாது தேகமப்பா
சாதனையா யடிக்கடிமு லத்தைத்தொட்டுச்
சதாசிவனார் மூலத்தைத் தியானஞ்செய்தால் …
|
கணநாதர் |
No File
|
|
| #101 |
உடல் அழியாமை |
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #102 |
உடல் அழியாமை |
தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
தனிநட ராஜஎன் சற்குரு மணியே
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #103 |
உடல் அழியாமை |
மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா!
மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை
கூரான சிவபோக ஞானம் வந்தால்
கூடழிந்து போகாது கூடு கூடே
|
சட்டைமுனி நாயனார் |
No File
|
|
| #104 |
உடல் அழியாமை |
சோகமுற்றவ் வுடலழியும் இதுமொழிதப் பாது
சுத்தமுள்ள திருநடனத் தேகமதே நிற்கும்
யூகமுன்னுள் எண்ணாதே உடலழியாச் செயலில்
உறுதிறமெல் லாந்திர…
|
காகபுசுண்டர் பிரான் |
No File
|
|
| #105 |
உடல் அழியாமை |
வாக்கு மனமு மிறந்த பொருள்காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம்
|
ஔவையார் |
No File
|
|
| #106 |
உணவு |
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வா…
|
திரு அருணகிரிநாதர் |
No File
|
|
| #107 |
உணவு |
ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூ…
|
திருமூலர் |
No File
|
|
| #108 |
உணவு |
ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான்…
|
நீதி வெண்பா |
No File
|
|
| #109 |
உதவி |
உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்?
மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ?
கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச்
சிற்ற…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #110 |
உதவி |
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #111 |
உயிர் |
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே
|
திருமூலர் |
No File
|
|
| #112 |
எட்டிரண்டு |
பேணி யதோரடி வயிற்றைப் பார்வை செய்வார்
பிலமுள்ள மேல்வயிற்றைத் தியானஞ் செய்வார்
பாணியதோர் நெஞ்சதனை தியானஞ் செய்வார்
பசுருகின்ற கண்டத்தை நி…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #113 |
எட்டிரண்டு |
மலமதம் பொய்ம்மை யென்றோது குயிலே - எழு
புவனமகன்றிட்டோ மென்றோது குயிலே
எட்டிரண்டறிந் தோற்கிடரில்லை குயிலே - மன
மேகாமல் நிற்கில் கதியெ…
|
இடைக்காட்டு சித்தர் |
No File
|
|
| #114 |
எட்டிரண்டு |
மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய் புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீட…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #115 |
கருணை |
தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்குஎன்னைத்
தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே"
|
தாயுமானவர் |
No File
|
|
| #116 |
கலியுகம் |
யோகி பரமானந்த
கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத
பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள்
பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள்
குறைவ…
|
ஆசான் கோரக்கர் |
No File
|
|
| #117 |
கல்வி |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #118 |
கல்வி |
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #119 |
கல்வி |
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #120 |
கல்வி |
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #121 |
கல்வி |
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே.
சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ
வாகான மெய்…
|
இடைக்காட்டுச் சித்தர் |
No File
|
|
| #122 |
கல்வி |
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #123 |
கல்வி |
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #124 |
காலன், மறலி |
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே
கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்
கூத்தாடிக்கூத் தாடியேநீ யாட…
|
பாம்பாட்டிச் சித்தர் |
No File
|
|
| #125 |
காலன், மறலி |
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாம…
|
அபிராமி பட்டர் |
No File
|
|
| #126 |
காலன், மறலி |
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூ…
|
அருணகிரிநாதர் |
No File
|
|
| #127 |
காலன், மறலி |
உறியிற் றயிரிருக்க வோர் மத்திருக்க
அறியாமல் வெண்ணெய்க் கலையும் நெறியாய்க்
கறந்து கொள்ளல் விட்டய்யோ காலனார் வந்தால்
இறந்து விடப் போறீ றினி
|
கருவூரார் |
No File
|
|
| #128 |
காலன், மறலி |
காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !
|
பட்டினத்தார் |
No File
|
|
| #129 |
காலன், மறலி |
மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #130 |
காலன், மறலி |
மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்
மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்
ம…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #131 |
காலன், மறலி |
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #132 |
காலன், மறலி |
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #133 |
காலன், மறலி |
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்ப…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #134 |
குரு |
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
|
ஔவையார் |
No File
|
|
| #135 |
குரு |
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைக் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டும்
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெ…
|
பத்திரகிரியார் |
No File
|
|
| #136 |
குரு |
மரண தருவாயில் தன் குலமாவது, தான் தேடிய செல்வம் ஆவது, தன்னுடைய பலமாவது, தான் கற்ற சாஸ்திரங்களாவது, உற்றார் உறவினராவது, கூடப் பிறந்த சக…
|
குரு கீதை |
No File
|
|
| #137 |
குரு |
யானே பொய்யென் னெஞ்ஞும் பொய்யென் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கு
மானே யருளா …
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #138 |
குரு |
குருவின் திருஉருவை எப்பொழுதும் தியானிக்கவும் குருவின் நாமத்தைச் சதா ஜெபிக்கவும்.
குரு நாமத்திற்குச் சமமான தெய்வமுமில்லை, பிதாவுமில்ல…
|
குருகீதை |
No File
|
|
| #139 |
குரு |
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.
|
ஔவையார் |
No File
|
|
| #140 |
குரு |
வெட்டாத சக்கரம் பேசாத
மந்திரம் வேறொருவர்க் கெட்டாத
புட்பமிறையாத தீர்த்தம்
மினி முடிந்து கட்டாத லிங்கங்
கருதாத நெஞ்சக் கருத்துள்ளே
முட்ட…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #141 |
குரு |
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே
எய்ப்பற வாழ்க என்றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநடராசஎன் சற்குரு மணியே
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #142 |
குரு |
இறவாத இன்பத்து எமையிருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாரும்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று
பேரிலா நாதனும்ஓர் பேர்புனை…
|
உமாபதி சிவாச்சாரியார் |
No File
|
|
| #143 |
குரு |
உள்ளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்பும் ஆவோமென்று - மெள்ள
நரருருவில் ஆரூரில் வந்தார் நமையாண்(டு)
அருள்புரி ஞா…
|
சித்தாந்த சாஸ்திரம |
No File
|
|
| #144 |
குரு |
காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய
ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய
ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அ…
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #145 |
குரு |
சிவபெரு மானென்று னானழைத்து ஏத்தத்
தவபெரு மானென்று தான்வந்நு னின்றார்
அவபெரு மானென்னை ஆளுடை னாதன்
பவபெரு மானென்று பணிந்நுனின் றேனே
|
திருமூலர் |
No File
|
|
| #146 |
குரு |
காகம் உணவு கலந்நுண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ
போகமென்னும் பேரின்ப வெள்ளம் பொங்ஙித் ததும்பி பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்கு தையோ இன்புற்றிடனாம் …
|
தாயுமான சுவாமிகள் |
No File
|
|
| #147 |
குரு |
அறுவகைச் சமயத் தோர்க்கும் அறுமுகத் தெய்வமாகி
செறிதரு பிரம்மம்னான் என்றுசின் மயிலி லேறி
குருமுனிக் கருளிச்ஜீவ குகைதொறும் வீற்றிருந்ந
ம…
|
சுப்பிரமணிய கடவுள் |
No File
|
|
| #148 |
குரு |
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
---
சதுர் இழந்து அறிமால்…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #149 |
குரு |
மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே.
வேத வ…
|
கடுவெளிச் சித்தர் |
No File
|
|
| #150 |
குரு |
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #151 |
குரு |
சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #152 |
குரு |
மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்
பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய்
பொய்த்தேவைப் போற்றுமடி.
முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
பத்…
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #153 |
குரு |
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
சேரா வாகுமே கோனாரே.
|
இடைக்காட்டுச் சித்தர் |
No File
|
|
| #154 |
குரு |
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே
|
திருமூலர் |
No File
|
|
| #155 |
குரு |
வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த
மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரண சற்குருதாள் …
|
பாம்பாட்டி சித்தர் |
No File
|
|
| #156 |
குரு |
பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின்…
|
பாம்பாட்டி சித்தர் |
No File
|
|
| #157 |
குரு |
காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நி…
|
பாம்பாட்டி சித்தர் |
No File
|
|
| #158 |
குரு |
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
|
கந்தர் அநுபூதி |
No File
|
|
| #159 |
குரு |
எப்படிக் குளவி, புழுவைத் திருப்பிக்குளவியாக்கிற்றோ அப்படியே குருவும் தன்னைப்போல் உருவம் தந்து பறக்கவைத்து இட்டுச் சென்றார்
|
கபீர்தாசர் |
No File
|
|
| #160 |
குரு |
இந்த மனித உடல் அழிவதுதான், குருவின் புகழ்பாடி நற்கதி அடை
|
கபீர்தாசர் |
No File
|
|
| #161 |
குரு |
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தி…
|
திருமூலர் |
No File
|
|
| #162 |
சற்குரு |
மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் றொடங் கினர்க் கோர், வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
|
தாயுமானவப் பெருமான் |
No File
|
|
| #163 |
சாகாநிலை |
பிரம்ம ஸம்ஸ்தோ அம்ருதத்வ மேதி
(பிரம்மத்தை அறிந்தவன் சாகாநிலை எய்துகிறான்)
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
(எமனாகிய ம்ருத்யுவால் வரும் மரணத்த…
|
ப்ரஹதாரண்ய உபநிடதம் |
No File
|
|
| #164 |
சாதல் |
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #165 |
சாதி |
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற த…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #166 |
சாதி |
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள ப…
|
ஔவையார் |
No File
|
|
| #167 |
சான்றோன் |
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #168 |
சிவன்வரின் |
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே
|
திருமூலர் |
No File
|
|
| #169 |
சீவன் |
பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக்…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #170 |
சீவன் |
உடம்புகள் நாற்கும் உயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ டொழியாப் பிரமங்
கடந்தொறு நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறிவாரே
|
திருமூலர் |
No File
|
|
| #171 |
சீவன் |
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே
|
திருமூலர் |
No File
|
|
| #172 |
சுவாசம் |
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
…
|
திருமூலர் |
No File
|
|
| #173 |
சுவாசம் |
நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?
|
இயேசுபிரான் |
No File
|
|
| #174 |
செவிச்செல்வம் |
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை 411
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் 412
ச…
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #175 |
சொர்க்கம் |
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் …
|
இயேசுபிரான் |
No File
|
|
| #176 |
சொர்க்கம் |
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று ச…
|
இயேசுபிரான் |
No File
|
|
| #177 |
சொர்க்கம் |
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிய…
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #178 |
சொர்க்கம் |
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே
கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்
கூத்தாடிக்கூத் தாடியேநீ யாட…
|
பாம்பாட்டிச் சித்தர் |
No File
|
|
| #179 |
சோதனை |
துன்ப துயரங்கள், உலக இம்சைகள் ஆகிய நெருப்பில் பலதடவை வாட்டப்பட்ட பிறகுதான், மனிதன் ஹிருதய சுத்தனாகி ஈசுவர சன்னிதானத்தில் செல்வதற்கு ஏற்ற ப…
|
பரமஹம்ஸர் |
No File
|
|
| #180 |
சோதனை |
சோதனையைச் சகிக்கிற மனுஷன், ஜீவ கிரீடத்தைப் பெறுவான்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #181 |
ஜீவஸ்தானம் |
ஜீவஸ்தானம்
ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2.
அவை சிரசு.கண்டம்;
சிரத்திலுள்ளது
பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன் ; இது
…
|
வடலூரின் வல்லபச் சிம்மம் - இராமலிங்ங வள்ளல் |
No File
|
|
| #182 |
தக்கார் தகவிலர் |
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #183 |
தன்குற்றம் |
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #184 |
தன்குற்றம் |
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #185 |
தன்குற்றம் |
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
|
இயேசுபிரான் |
No File
|
|
| #186 |
தன்னையறிதல் |
தன்னில் தன்னை அறியுந் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற் கரியனே
|
அப்பர் பெருமான் |
No File
|
|
| #187 |
தன்னையறிதல் |
தன்னை யறியு மறிவு தனைப்பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு.
|
ஒளவையார் |
No File
|
|
| #188 |
தன்னையறிதல் |
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே
|
திருமூலர் |
No File
|
|
| #189 |
தன்னையறிதல் |
சாற்றியதோர் வாக்கதனைப் பொய்யென்றெண்ணித்
தலைநெறித்துப் போகாதே சண்டிமாடே
சேற்றுமத்தி லீப்போலே தியங்கிப்போவாய்
ஜெகஜால நரகத்தி லழுந்திவீ…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #190 |
தர்மம் |
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குத…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #191 |
தானம் |
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #192 |
தானம் |
கேளப்பா வென்மகனே ஞானமூர்த்தி
கேசரத்திற் சிற்றரிவு நீயுமிச்சம்
வாளப்பா திரவியத்தை யீயும் வேதும்
வளமான நவதானம் வழங்குவேதும்
நாளப்ப…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #193 |
திரவியம் |
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #194 |
திரவியம் |
சீனா சென்றாவது ஞானத்தைப் பெறு
|
நபிகள் பெருமான் |
No File
|
|
| #195 |
திரவியம் |
திரைகடலோடியும் திரவியம் தேடு
|
ஔவையார் |
No File
|
|
| #196 |
திருநாமம் |
உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உ…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #197 |
திருவடி |
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே…
|
திருமூலர் |
No File
|
|
| #198 |
திருவாசகம் - சிவபுராணம் |
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அ…
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #199 |
தேகம்-4 |
கருத்தென்ற அறிவதுவே தூலமண்ணைக்
கருவான சூட்சமண்ணைத் துயர்ந்துபோகும்
திருத்தென்ற காரணமண் சோமன்மேலே
திசையான மகாகரண நாதனாகி
நிருத்தென்ற…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #200 |
தோண்டி |
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
|
கடுவளிச் சித்தர் |
No File
|
|
| #201 |
நன்றி |
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #202 |
நரகம் |
(நபியே! அவர்களிடம்) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதை) அவர்கள் புரிந்திருக்க வேண்டுமே! திருக்…
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #203 |
நரகம் |
கருடபுராணத்தில் ஒவ்வொரு மனிதரும் செய்யும் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன.
"கருடா, யமபுரியில் மொத்தம் 84,60,000 நரகங்கள் உள்…
|
கருட புராணம் |
No File
|
|
| #204 |
நரகம் |
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #205 |
நரகம் |
சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி.
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
தப்பா நரகமடி க…
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #206 |
நரகம் தீர்க்கும் மருந்து |
திருக்கண்டேன் பொன்மேனி
கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்,
- செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம்
கைக்கண்டேன்,
என்ன…
|
பேயாழ்வார் |
No File
|
|
| #207 |
நற்றாள் |
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #208 |
நல்லவர்க ணல்லவர்க |
சொல்லுமெய்ஞ் ஞானச் சுகக்கடலை யுண்டியான் சும்மா விருக்க வருள்வாய்
சுத்தபரி பூரணச் சுகவாரி தன்னிலோர் சொட்டாகி லுந்தொட்ட பேர்
நல்லவர்க ணல்லவர்க…
|
மஸ்தான்சாகிபு |
No File
|
|
| #209 |
நாமம் |
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே…
|
திருஞானசம்பந்தர் |
No File
|
|
| #210 |
நிலையாமை |
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #211 |
நிலையாமை |
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #212 |
நிலையாமை |
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #213 |
நிலையாமை |
வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூட…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #214 |
நிலையாமை |
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #215 |
நோய் |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (மருந்து-948)
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். (ம…
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #216 |
பாவத்தின் சம்பளம் மரணம் |
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #217 |
பிறப்பறுத்தல் |
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி.
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #218 |
பிறப்பறுத்தல் |
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #219 |
பிறப்பறுத்தல் |
மனிதரிலும் பறவையுண்டு, விலங்குண்டு
கல்லுண்டு, மரமுண்டு
மனிதரிலும் நீர் வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு…
|
சிவானந்த போதம் |
No File
|
|
| #220 |
பிறப்பு |
கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #221 |
பிறவாமை |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #222 |
பிறவாமை |
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ
அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்
மற…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #223 |
பிறவாமை |
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்
|
காரைக்காலம்மையார் |
No File
|
|
| #224 |
பிறவாமை |
உலகில் மீண்டும் பிறவாமையும் இறைவனை மறவாமையும் அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே!
|
அபிராமிப்பட்டர் |
No File
|
|
| #225 |
பிறவி |
பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய
அறிவு பெரிதாமடி குதம்பாய்
அறிவு பெரிதாமடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #226 |
பிறவி |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #227 |
பிறவி |
எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்
யாதினும் அறிது காண்;
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
ஏதுவருமோ அறிகிலேன்
|
தாயுமான சுவாமிகள் |
No File
|
|
| #228 |
புனித குலம் பெறுமாறு புகலல் |
1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து …
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #229 |
புலால் மறுத்தல் |
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #230 |
புலால் மறுத்தல் |
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
…
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #231 |
புலால் மறுத்தல் |
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #232 |
புலால் மறுத்தல் |
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #233 |
புலால் மறுத்தல் |
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #234 |
புலால் மறுத்தல் |
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே
|
திருமூலர் |
No File
|
|
| #235 |
புலால் மறுத்தல் |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #236 |
புலால் மறுத்தல் |
கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு
கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய்
சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையி…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #237 |
புலால் மறுத்தல் |
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே
|
திருமூலர் |
No File
|
|
| #238 |
புலால் மறுத்தல் |
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #239 |
புலால் மறுத்தல் |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #240 |
பூசை |
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே
|
திருமூலர் |
No File
|
|
| #241 |
பூசை |
"கேளப்பா வென்மகனே ஞானமூர்த்தி
கேசரத்திற் சிற்றரிவு நீயுமிச்சம்
வாளப்பா திரவியத்தை யீயும் வேதும்
வளமான நவதானம் வழங்குவேதும்
நாளப்…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #242 |
பூசை |
பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #243 |
பூசை |
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டத…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #244 |
பேரின்பம் |
காகம் உணவு கலந்நுண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ
போகமென்னும் பேரின்ப வெள்ளம் பொங்ஙித் ததும்பி பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்கு தையோ இன்புற்றிடனாம் …
|
தாயுமான சுவாமிகள் |
No File
|
|
| #245 |
பொய்க்குரு |
மிச்சமடா பூதலத்தில் ஞானிமெத்த
மிரட்டுவா னுருட்டுவான் மெலிந்துபோவான்
பச்சம்வைத்துப் பிர்மத்தில் நிறுத்தமாட்டான்
பலசாத்தி ரம்படித்துப் பலனுங்க…
|
சுப்ரமணியர் |
No File
|
|
| #246 |
பொய்க்குரு |
சொல்லுகிறேன் தான்தன்மஞ் செய்தீரானாற்
சொர்க்கமுண்டு நரகமில்லை யென்பார்பாரு
வெல்லுகிறே னெனக்குபண மீய்ந்தாலிப்போ
வெகுசுருக்கு மோட்சமது ச…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #247 |
பொய்யனேன் |
மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன்
அருளென்னு மாசை …
|
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் |
No File
|
|
| #248 |
மனமெனும் தோணி |
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
…
|
திருநாவுக்கரசர் |
No File
|
|
| #249 |
மனம் |
மனம் என்னும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!
|
இடைக்காட்டுச் சித்தர் |
No File
|
|
| #250 |
மனம் |
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது …
|
அகஸ்திய மகரிஷி |
No File
|
|
| #251 |
மனுவின் கடமை |
உங்களுக்கு ஓர் இதயம்தானுண்டு. இரண்டு இதயங்களில்லை. அதில் ஒரு பொருளை அடைத்து நிரப்பிவிட்டால் வேற வஸ்துக்கள் அங்கே நுழைய இடமேது.
|
கௌதுல் அஃலம் |
No File
|
|
| #252 |
மனுவின் கடமை |
சர்வேஸ்வரனை நேசிப்பதும், அவரொருவருக்கு ஊழியம் பண்ணுவது மாத்திரமே தவிர மற்றதெல்லாம் வியர்த்தங்களில் வியர்த்தம், எல்லாம் வியர்த்தம். உலகத்தை நிந்த…
|
கிருஸ்துநாதர் அனுசாரம் |
No File
|
|
| #253 |
மனுவின் கடமை |
மனிதப்பிறவி, முக்தியில் ஆசை, மகாபுருஷர்களை நாடியடைதல் ஆகிய இம்மூன்றும் அடைதற்கரிது
|
ஸ்ரீ ஆதிசங்கரர் பெருமான் |
No File
|
|
| #254 |
மனுவின் கடமை |
சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி
|
திருவருட்பிரகாச வள்ளலார் |
No File
|
|
| #255 |
மனுவின் கடமை |
ஒரு வாலிபர் அண்ணலார் சபையில் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே, விசுவாசிகளில் அதிக புத்திசாலி யார்?” என்று கேட்டார்.
“மரணத்தை அதிகம…
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #256 |
மனுவின் கடமை |
அழிக்கப்படும் கடைசி விரோதி - மரணம்
|
இயேசுபிரான் |
No File
|
|
| #257 |
மனுவின் கடமை |
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #258 |
மனுவின் கடமை |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #259 |
மரணம் |
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்¬பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே …
|
இயேசுபிரான் |
No File
|
|
| #260 |
மரணம் |
ஒரு வாலிபர் அண்ணலார் சபையில் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே, விசுவாசிகளில் அதிக புத்திசாலி யார்?” என்று கேட்டார்.
“மரணத்தை அதிக…
|
நபி (ஸல்) அவர்கள் |
No File
|
|
| #261 |
மரணம் |
அழிக்கப்படும் கடைசி விரோதி - மரணம்.
|
இயேசுபிரான் |
No File
|
|
| #262 |
முத்தர் மனம் |
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே - வித்தகமாய்
காதி விளையாடி இருகை வீசி வந்நாலும்
தாதி மனம் னீ…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #263 |
முத்தி |
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை,
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்,
பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்…
|
பட்டினத்தார் |
No File
|
|
| #264 |
முத்தி |
மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண்
மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை யுண்டவர்க்கு …
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #265 |
முத்தி |
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி ற…
|
அருணகிரிநாதர் |
No File
|
|
| #266 |
முத்தி |
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #267 |
முத்து |
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பி…
|
இயேசுபிரான் |
No File
|
|
| #268 |
மெய் |
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம்…
|
திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் |
No File
|
|
| #269 |
மெய் |
பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும்
பொய்யெனவே
மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே
காண்பேனா - காண்
|
தாயுமான சுவாமிகள் |
No File
|
|
| #270 |
மெய் |
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
பொய்ப்பணி ஏதுக்கடி?
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்
மெய்யவ…
|
குதம்பைச் சித்தர் |
No File
|
|
| #271 |
யாக்கை |
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் யாக்க…
|
திருமூலர் |
No File
|
|
| #272 |
யாக்கை நிலையாமை |
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்ப…
|
திருமந்திரம் |
No File
|
|
| #273 |
லிங்கம்-யோனி |
நின்றதோர் குருவப்பா நன்றாய்க்கேளு
நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக
அன்றதோர் குருவினது நாவேலிங்கம்
அதிகமுள்ள சீஷனது காதேயோனி
சென்றதோர்…
|
சுப்பிரமணியர் |
No File
|
|
| #274 |
வாய்ச்சுவை |
கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விரு…
|
நாச்சியார் |
No File
|
|
| #275 |
வித்திலாத வித்து |
சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது
முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது
வித்திலாத வித்திலே…
|
சிவவாக்கியர் |
No File
|
|
| #276 |
விபூதி |
கங்காளன் பூசுங் கவசத் திரு நீற்றை
மங்கா மற்பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாகுஞ் சிவகதி
|
திருமூலர் |
No File
|
|
| #277 |
விளக்கு |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
|
திருவள்ளுவர் |
No File
|
|
| #278 |
வேதம் ஆகமம் முதலிய னூல்கள் – எதனின் விளக்கம்? |
வேதம் – பதி னூல்
ஆகமம் – பசு னூல்
புராணம் – பாச னூல்
இதிகாசம் – பக்தி னூல்
ஸ்மிருதி – கர்மத்தை விளக்கும்.
|
வடலூரின் வல்லபச் சிம்மம் - இராமலிங்ங வள்ளல் |
No File
|
|