Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப் போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப் புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடு பாம்பே! -10 பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப் புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும் மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும் மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே! -11 வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப் போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும் பூரண சற்குருதாள் கண்டு ஆடுபாம்பே! -12 உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக் கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டு அன்பாய்க் களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே! -13 அங்கையிற் கண்ணாடிபோல ஆதி வத்துவை அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச் சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே தமனியப் படம் எடுத்து ஆடுபாம்பே! -14 காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின் கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும் தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின் துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே! -15 கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்? வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும் மெய்க் குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே! -16 அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும் அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய் வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே! -17 கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடும் கடமழி யாது வாழுங் காரணக் குரு பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே! -18 வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும் வல்லுடம்புக் கொருகுறை வாய்த்திடாது மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின் மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே! -19
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry