Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
கருடபுராணத்தில் ஒவ்வொரு மனிதரும் செய்யும் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன. "கருடா, யமபுரியில் மொத்தம் 84,60,000 நரகங்கள் உள்ளன. இவற்றுள் இருபத்தெட்டு நரகங்கள் மிகவும் கொடுமையானவை. 1. தாமிஸிர நரகம்: பிறரின் பொருளை அபகரிப்பவர்களையும், பிறரின் மனைவியோடு தொடர்பு வைத்திருப்பவர்களையும், பிறரின் குழந்தைகளைத் திருடுபவர்களையும் இந்த நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவர். மயக்கமடையும் வரையும் தாக்குதல் நடைபெறும். பின் மயக்கத்தைத் தெளிவித்துத் தாக்குதல் நடைபெறும். நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள். 2. அநித்தாமிஸ்ர நரகம்: கணவனுக்குத் துரோகம் செய்த மனைவி, மனைவிக்குத் துரோகம் செய்த கணவன் இவர்களை இந்த நரகத்தில் இருத்திப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை இவர்களின் கண்களுக்குள்ச் செருகுவார்கள். இதனால் தான் இந்த நரகத்திற்கு அந்தாமீஸ்வரம் என்ற பெயர் உண்டானது. உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள் 3. ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுத்தல், பிரித்தல், அழித்தல், அவர்களின் பொருள்களைப் பறித்தல். பொய்வழக்காடுபவர்கள், பொய்ச்சாட்சி சொல்பவர்கள், தீமைகளைச் செய்து பிறரின் குடும்பங்களை அழிப்பவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுகின்றனர். பிறரைஏமாற்றியவர்கள் 'ருரு' என்ற என்ற மிருகவடிவத்தைப் பெறுவர். ஏமாந்தவர்களின் துன்பப்பட்டு அழுத கண்ணீர் ருருவிடம் சேர்ந்திருக்கும். ருரு அங்குள்ளோரைப் பயங்கரமாகத் தாக்கும். பாவிகளை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள். 4. மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தல், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல். பலரையும் பல்வேறு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏமாற்றியவர்களை ருருக்கள் பயங்கரமாகக் கொத்திக் கிழிக்கும் இதனால் இதை மகாரௌரவம் என்பார்கள். 5. கும்பீபாகம்: பறவைகள், பசு. மான், முயல் போன்றவற்றைக் கொன்று தின்றவர்களையும், அவர்களைச் சித்திரவதை செய்தவர்களையும் இங்கே தள்ளுவார்கள். இங்கு எண்ணெய் பெரிய அண்டாக்களில் எந்நேரமும் கொதித்துக் கொண்டிருக்கும். அதிலிட்டு இவர்களை வாட்டி எடுப்பார்கள். 6. கால சூத்திரம்: பெற்றோர்களுக்குத் துன்பம் செய்பவர்களையும், மகான்களைக் கேலிசெய்து துன்புறுத்துபவர்களையும் இந்த நரகத்தில் தள்ளிவிடுவார்கள். இங்கு அனல் போலச் சூரியன் தகிப்பான். எங்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். இதனால் உயிரின் சரீரம் எரியும், நா உலரும், பசி வாட்டும், அதனால் அவற்றைத் தாங்கமுடியாத உயிர் அங்குமிங்கும் ஓடும். நிலத்தில் புரளும், துள்ளிக் குதிக்கும், பின் மயக்கமடைந்துவிடும். மயக்கத்தை தெளிவிப்பார்கள். பின் முதலில் இருந்து சித்திரவதை ஆரம்பமாகும். 7. அசிய பத்திரம் (வாளலகு): தன்னுடைய குலதெய்வங்களை நிந்திப்போர், கவனிக்காது விடுவோர், தான் செய்ய வேண்டிய தர்மங்களைச் செய்யாதவர் ஆகியோரைச் தள்ளிச் சித்திரவதை செய்யும் நரகம் இது. கற்களும், பாறைகளும் நிறைந்த மேடுபள்ளமான நரகம் இது. கத்தியைப் போலக் கூர்மையான ஒருவகை இலைகளால் செய்யப்பட்ட சாட்டையால் இங்குள்ளவர்களை அடிப்பார்கள். அடியைத் தாங்கமுடியாத உயிர்கள் அங்கும் மிங்கும் ஓடும்போது இடறிவிழுவர். அப்போது கூரிய கற்கள் தாக்கும் அதனால் இரத்தம் பெருக மயக்கமடைவர். 8. பன்றிமுகம்: லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதிக்கு மாறாகத் தீர்ப்பு எழுதுபவர்கள், அகந்தையுள்ளவர்களை அடைக்கும் நரகம் இது. உண்மைக்கு மாறாக வாதாடித் தீயவர்களுக்குப் பொருள் சேர்த்துக் கொடுக்கும் வழக்கறிஞர்கள் பலர் இங்கிருப்பார்கள் இந்த நரகம் பன்றியினது முகம்போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள யமதூதுவர்கள் இவ் நரகத்தில் உள்ளோரின் கை கால்களை விறகுச் சுள்ளிகளை முறிப்பது போல முறிப்பார்கள். பின் அவற்றை அடித்து நொருக்குவார்கள். 9. அந்த கூபம் (பாழடைந்தகிணறு): கொலை செய்தவர்களைத் தள்ளும் கிணறு இது. இதன் ஒரு பகுதியில் கூர்மையான கொம்புகளை உடைய மாடுகள் நின்று தமது கூர்மையான கொம்புகளால் தாக்கும். கழுகும், இராஜாளியும் இரத்தம் வழியும் தசையைக் கொத்திக் கொத்தி உண்ணும். கொசுக்களும் வேறு பூச்சிகளும் இரத்தத்தில் மொய்த்து அதை உறிஞ்சிக் குடிக்கும். தேளும், பாம்பும் ஒரு பகுதியில் இருந்து கொத்தும். கொலை செய்தவனின் உடலில் எத்தனை மயிர்கள் இருந்தனவோ அத்தனை ஆண்டுகள் அக்கிணத்தில் வாழவேண்டிய நிலை ஏற்படும். 10. கிருமிபோசனம்: இது லட்சம் போசனை பரப்பளவைக் கொண்டது. சுயநலத்துடன் தான் மட்டும் உண்டு வாழ்ந்தவர்கள். விருந்தினர் வந்திருக்க அவர்களுக்கும் கொடாது தாம் உண்டவர்கள், பிறரை வருத்தியவர்கள், தெய்வநிந்தனை செய்தோர் இங்கு தள்ளப்படுகின்றனர். இங்கே விழுந்தவர்கள் உடனே புழுக்களாகிவிடுவர். அங்கிருக்கும் பெரிய புழுக்கள் இவர்களைக் கடித்துக் குதறும். 11. அக்கினிக் குண்டம்: கொள்ளை அடிப்பவர்களுக்குத் தண்டனை அளிக்கு நரகம் இது. திருடினவர்களை இரும்புத் துடுப்பால் அக்கினி குண்டத்தில் தள்ளி வாட்டி வதைப்பார்கள். 12. வஜ்ர கண்டகம்: பிற ஆடவரோடு உறவு கொண்ட மனைவிமாரையும், எந்நேரமும் தாசிவீடே கதி என்று இருந்து தனது கடமையை மறந்த புருசர்களையும் இங்கே அடைத்து வைத்திருப்பர். பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புத் தூண்கள் பல அங்கே காணப்படும். அத் துண்களைக் கட்டிப்பிடிக்கச் சொல்வார்கள். யமகிங்கரர்கள் சாட்டையால் தொடர்ந்து அடித்தவண்ணம் இருப்பர். அந்தச் சூடேற்றப்பட்ட இரும்புத்தூண்கள் கட்டியணைத்தவரை அவரது பாவம் தீர்த்த பின்பு தான் விடும். அதுவரை அவர்கள் தூணோடு ஒட்டப்பட்டிருப்பர். 13. சான்மலி: நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு ஆகியவற்றைப் பாராமல் தரம்கெட்ட நிலையில் எவருடனும் கூடிக் களிக்கும் காமமோகம் உள்ளவர்களை இங்கே தள்ளி முட்கள் பல உள்ள இரும்பு ஆயுதத்தால் கொத்திக் கொண்டேயிருப்பார். 14. வைதரணி: இது ஓர் உதிர ஆறு. இதில் பல்வேறு வகையான அசுத்தமான பொருட்கள் கலந்திருக்கும். எலும்புகள், சதைத்துண்டுகள், மலம், சலம் போன்றனவும் அட்டைகளும் கலந்திருக்கும். அத்துடன் முதலைகள், பாம்புகள், திமிங்கிலங்கள் என்பன நீந்திக்கொண்டிருக்கும். வாழ்க்கையில் நெறிபிறழ்ந்தவர்கள் இதில் தள்ளப்படுவார்கள். அங்கு நீந்திக்கொண்டிருக்கும் திமிங்கிலங்கள் விழுங்கி விழுங்கிக் கக்கிக் கொண்டிருக்கும். தேகம் புண்ணாகிச் சீழ்பிடித்து வலியால் துடிதுடிப்பர். வாய் திறந்து அலறினால் வாய்க்குள் தலைமுடி சிக்கிக் கொள்ளும். 15. பூயோகம்: வெட்கம் நாணம் இரண்டையும் விட்டுவிட்டுத் தமது மனம்போன போக்கில் ஊரவர் தூற்ற வாழ்ந்தவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். இது சிறுநீர் நிறைந்த குட்டையாகும். இங்கு தள்ளப்படுவோர் தமக்குள்த் தாமே சண்டை செய்வார்கள். உடல் புண்ணானாலும் அவர்கள் சண்டை செய்வதை நிறுத்தமாட்டார்கள். அதிலிருந்து உயிர்கள் வெளியேற முடியாது. வெளியே செல்லச் செல்ல சளிகளில் வழுக்கி மீண்டும் அக்குட்டையில் விழுவர். 16. பிராண ரோதம்: நாய், கழுதை, காளை போன்ற மிருகங்களைத் தமது தேவைக்காக வளர்த்து அவை வயதானதும் அதிலிருந்து எந்தப் பயனையும் பெறமுடியாதென்று நினைத்து அவற்றைக் கண்காணாத இடங்களில் கொண்டு சென்று விடும் பாவிகளை இந்த நரகத்தில் தள்ளுவார்கள். அவர்களுக்குக் காவலுக்கு நிற்கும் யமதூதுவர்கள் மேலே இருந்து தொடர்ந்து அம்புகளை எய்து இவர்களைக் காயப்படுத்திக் கொண்டிருப்பர். மான், முயல், பன்றி போன்ற காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்பவர்களும் விற்பனை செய்பவர்களும் இந்த நரகத்தில் தான் தள்ளப்படுவார்கள். 17. விசயனம்: ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பி பெரும் யாகங்களைச் செய்து பசுக்களைக் கொன்று யாக குண்டங்களில் இட்டு அவற்றை வருத்துவோர் இந்த நரகத்தில் தள்ளப்படுகின்றனர். இவர்களை ஓயாது முள்ச்சாட்டையால் எமதூதுவர்கள் அடிப்பார்கள். 18. லாலாட்சம்: இயற்கைக்கு மாறான விதத்தில் காமம் கொண்டு தனது மனைவியை விபரீதமான காம இச்கைக்கு ஆளாக்குபவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகின்றனர். 19. சாரமேயாதனம்: பகை கொண்டவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொழுத்தி அவ்வீட்டுக்குரியவர்களைத் துன்பப்படுத்துவோரும், தனது நல்வாழ்வுக்காகப் பிறரின் சொத்துக்களை நயவஞ்சகமாகக் கவர்பவர்களும், விசம் கொடுத்து உயிர்களைக் கொல்பவர்களும், பொறாமையால் பிறரைக் கேவலப்படுத்துபவர்களும் இந்த நரகத்தில் தள்ளப்படுவர். இங்கு நாயின் இறைச்சியே உணவாகக் கொடுக்கப்படும். எழுநூறு வேட்டை நாய்கள் இவர்களை எந்நேரமும் கடித்துக் குதறிக் கொண்டிருக்கும். இது ஒரு பயங்கரமான நரகம். 20. அவிசி: தற்பெருமை கொண்டு மற்றவர்களை மதியாது கேடு செய்பவர்கள், உணவை வீணாக்குபவர்கள், ஆணவம் உள்ளவர்கள் அவிசியின் உச்சியில் இருந்து கீழே தள்ளப்படுவார்கள். கரடுமுரடான கற்களையும், பெரும் பள்ளங்களையும் உடைய இம்மலையில் இருந்து உருண்டு வருபவர்களின் உடல் சிதறும். அங்கங்கள் பிரிந்து மலைகளில் சிதறிக் கிடக்கும். அவற்றை யமகிங்கரர்கள் கூட்டி அள்ளி ஒன்று சேர்த்து உருவமாக்கி மீண்டும் மலை உச்சிக்குக் கொண்டு சென்று தள்ளிவிடுவார்கள். இது தொடர்ந்து நடைபெறும். 21. பரிபாதனம்: மதுபானங்களைக் குடிப்பவர்கள், மதுவை வற்புறுத்திக் குடிக்கச் செய்தோர், போதைப் பொருட்ளை விற்போர், பயன்படுத்துபவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுபவர். இங்கு யமகிங்கரர்கள் நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சாட்டையால் எந்நேரமும் அடித்துக் கொண்டே இருப்பார்கள். நன்றாகக் காய்ச்சித் திரவம் போல வந்த இரும்புக் குழம்பை இவர்களுக்குப் பானமாகப் பருக்குவார்கள். 22. ஷாரகர்த்தமம்: அகம்பாகத்தால் தலைக்கனம் கொண்டு சான்றோரை மதிக்காது அவமதித்தவர்கள் இந்த நரகத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு அவர்களின் உடலில் பூரான், மரஅட்டை, வண்டு, தேனீ, எறும்புகள் போன்றவற்றை விடுவார்கள். அவை அவர்களைக் கடித்துக் குதறும். வேதனையைத் தாங்கமாட்டாது அழுதுகொண்டே இருப்பார்கள். 23. ரஷோகணம்: பொருள் தேடுவதற்காக நரபலி கொடுத்து யாகம் செய்தோரும், செய்வித்தோரும். நரமாமிசம் உண்போரும், பிதுர்களுக்கான கடன்களைச் செய்யாதவர்களும், சிசுக்களைக் கொன்றவர்களும் இந்த நரகத்தில் தள்ளபடுபவர். இவர்களால் பாதிக்கப்பட்டோர் கூரிய ஆயுதங்களினால் துண்டு துண்டாக அறுப்பர். பின் ஒன்று சேர்ப்பர். அதன் பின் அறுப்பர். 24. சூலப்ரோதம்: நயவஞ்சகமாக அப்பாவிகளைக் கொன்றவர்கள், தனக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாதவர்கள் மீது காரணமின்றிப் பகை கொண்டு அவர்களது பொருட்களைக் கவர்வதற்காகத் துன்பங்களைச் செய்தோர், தற்கொலை செய்து கொண்டவர்கள் இந்த நரகத்தில் அடைக்கப்படுவர். இவர்களை யமதூதுவர்கள் சூலத்தால் குத்துவார்கள். சூலம் குத்திய தசையில் இருந்து வெளிவரும் இரத்தத்தையும் சதையையும் கழுகு இனத்தைச் சேர்ந்த பறவைகள் கொத்தி உண்ணும். 25. தந்த சூகம்: கலப்படப் பொருட்களை விற்று லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள், கூலிக்கு வேலையாட்களை அமர்த்திவிட்டு உரிய வேதனம் கொடாதவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். இவர்களை ஐந்து முகம் கொண்ட கடுவாய்களும், ஏழு தலை உடைய கொடிய நாகங்களும், தேள்களும் கொத்திக் குதறும். 26. வடரோதம்: குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வசிக்கும் தேனீ போன்ற பிராணிகளைத் துன்புறுத்தி அதுகள் சேமித்து வைத்திருக்கும் தேன் போன்ற பொருட்களை எடுத்தோர், பில்லி சூனியம் வைப்போர் நச்சுப்புகை சூழ்ந்த இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். இந் நரகலோகம் முழுவதையும் தீ ஆக்கிரமித்து இருக்கும். எங்கு சென்றாலும் தீ அவர்களை எரிக்கும். 27. பர்யா வர்த் தகைம்: விருந்தினரை மனம் நோகும் படி நிந்தித்தவர்களும், சமித்துக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றவர்களும், தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றவர்களும் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். அவர்களது கண்களைக் காகங்களும், பருந்துகளும் கொத்திக் கொண்டிருக்கும். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்படும். வேதனையால் எந்த நேரமும் அழுது கொண்டிருப்பார்கள். 28. சூசி முகம் கடன் வாங்கி விட்டுத் திருப்பிக் கொடாது எமாற்றுபவர்கள், பணத்தைச் சேகரித்து புதைத்து வைத்துவிட்டு அதை எண்ணி மகிழ்பவர்கள், தவறான வழியில் சொத்துக்களைச் சேர்த்தவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுவர். இவர்களின் நாக்கை 'சந்தமிசினி' என்ற ஆயுதத்தல் பிடுங்குவர். பூமியெங்கும் கூர்மையான கத்திகளைப் புதைத்து வைத்து விட்டு இவர்களை அதன் மேல் நடக்க விடுவர். உணவுகளை விரயமாக்குபவர்களின் உறுப்புக்களை அரிந்து உப்பிட்டு வாட்டுவர். ஏனைய நரகங்கள் அயலவர்கள், இனத்தவர்களைக் காரணமின்றி வேதனைப்பட்டுக் கண்ணீர் சிந்தவைத்தோரை வேதனைப்பட்டவரின் கண்ணீரால் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு அமுக்குவர். இடித்து இடித்துப் பலமாக ஏசி மற்றவர்களைத் துன்புறுத்துபவர்களை உரலில் தள்ளி உலக்கையால் இடிப்பார்கள். சோம்பேறிகளை 'கூர்மகுண்டம்' என்ற நரகத்தில் தள்ளுவார்கள். அவர்களின் உடல் முழுவதையும் ஆமைகள் கடிக்கும். கற்றவர்கள், அறிஞர்கள், மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேளாதவர்களை கர்ணவிஷக்குண்டத்தில் தள்ளுவார்கள். கொழுப்பெடுத்து அலைந்தவர்களை மஞ்ஞா குண்டத்தில் தள்ளுவார்கள். ஆத்திர மிகுதியால் எதிரிகளின் வீடுகளையும், அவர்கள் விளைவித்த பயிர்களையும், பொதுச் சொத்துக்களை எரிப்பவர்களையும் வன்னிக் (நெருப்பு) கும்பத்தில் தள்ளுவர். காரணமின்றித் தனது நலனுக்காகக் கோள் சொல்பவர்களை தூஷிகாக் குண்டத்தில் தள்ளிச் சித்திரவதை செய்வார்கள். அப்பாவிகளைக் கொல்பவர்களை சரக்குண்டத்தில் தள்ளிச் சித்திரவதை செய்வர். பிறரைத் தேவையில்லாது வருத்தி இன்பங்காண்பவர்களை தப்பசூரிக் குண்டத்தில் தள்ளி, நெருப்பினால் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பூசிகளால் இவர்களின் உடலைக் குத்துவார்கள். இருபத்தெட்டு வகையான நரகங்களும் ஏராளமான கொடிய பல பிரிவுகளைக் கொண்டவை.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry