Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
யோகி பரமானந்த கலியின் தோற்றம் உண்மை நிற சாதிமத பேதம் மெத்த பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும் மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும் நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை வாளே முன் பின் வயது ஆண்டு நூறு வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன் கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செனிப்பே கலியான ஆண்டு ஐயா யிரம்பின் கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று நலியாது சந்திரகலை ஐ யாயிரம் மட் டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப் பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும் பொய்யான அந்தணரின் கொட்டம் போகும் வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி வழுவாது மனுக்கள் ஞானி யாமே. தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும் தாரணியில் மாந்தர் பல வருண மாவர் ஈனமின்றி யோக ச க்கி ராதி பத்தியம் இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம் மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார் நாடு முகமினிய நவரத் தின விளைவுண் டாகும் போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில் பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே. அந்தநாள் அக்காலம் நமது நாட்டில் அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம் விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும் மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே. கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக் கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில் மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல மகாரூப ரூப வெளி மதி மேற் காணும் துதியாக நாழி இரு இருபத் தைந்தில் தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும் சதியாக வடதேசம் தன்னி லோர்பால் கடல்போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே. எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம் ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார் பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான் பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும் சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச் சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry