Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
பேணி யதோரடி வயிற்றைப் பார்வை செய்வார் பிலமுள்ள மேல்வயிற்றைத் தியானஞ் செய்வார் பாணியதோர் நெஞ்சதனை தியானஞ் செய்வார் பசுருகின்ற கண்டத்தை நிசமேசெய்வார் காணியதோர் கபால நிலவரமே யென்பார் கருத்துள்ள நெற்றிக்கண் காணச் சொல்வார் ஆணியதோர் மூக்குமுனை யதீதமென்று அழகுள்ள விருகண்ணும் பார்வையாமே பார்வையென்ற திந்தமுறை யதீதமென்பார் பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார் சேர்வையென்ற குருசீடரிருவர் கெட்டார் செகந்தனிலே நோய்பிறந்தே உழன்று போவார் கோர்வையென்ற வைம்பூதக் கவனமாகிக் கொடிதான துயரத்தால் மாண்டுபோவார் ஏர்வையென்ற ஞானம் வந்து என்ன செய்யும் எட்டிரண்டும் அறியாத மூடர்தானே நாட்டியதோர் திசைகம்பந் தன்னைக் காணார் நாட்டில் குருவென்று முபதேசஞ் சொல்வார் ஏட்டிலே யெழுதிய மந்திரத்தை யெல்லாம் யியம்பு வான் மட்டி சொன்ன விதத்தைக் கேளு
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry