Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
மிச்சமடா பூதலத்தில் ஞானிமெத்த மிரட்டுவா னுருட்டுவான் மெலிந்துபோவான் பச்சம்வைத்துப் பிர்மத்தில் நிறுத்தமாட்டான் பலசாத்தி ரம்படித்துப் பலனுங்காணான் நிச்சயமாய் மனதொன்றாய் நிறுத்தமாட்டான் நிருவாணி தன்னையுந்தா னடுக்கமாட்டான் பச்சமதிற் கிரகநிலை யறிவான்பாவி பரதேசி யென்றுமிகப் பகருவானே. 27 பகருவான் வேடமிட்டுக் காவிபூண்டு பாடுவான் காலிலே குறடுமிட்டு அகருவான் மனதொன்றாய் நிறுத்தமாட்டான் ஆலயங்க ளுக்கருச்ச னைகள்செய்யச் சிகரகோ புரம்போலே மலர்கள்கொய்து செத்தசவந் தனைப்போட்டுத் தீபஞ்செய்வான் நகருமணி யைம்புலத்தை யொன்றதாக்கி நாதனையும் போற்றாத நாய்கள்தானே. 28 நாயென்று சொன்னாலு மறிவுமெத்த நாதனுட மணிவாச லறியாத்தோசி தாயென்று சிற்பரையை அறியாப்பாவி தந்தையென்று பிர்மத்திற் கூடாத்தோசி ஓயந்தக் கவலைகொண் டிருந்தபாவி ஓரமாய் வழக்குகளை யுரைத்ததோசி மாயமாய்ப் பணம்படைத்து மீயாப்பாவி மறுமனையாள் தனைமருவுந் தோசிதானே. 29 தோசியடா காயாச மறியாமற்றான் துவைத்திடுவான் காவிமண் தன்னால்மைந்தா வாசியடா காயாச முந்தனுள்ளே வடிவான சுத்தசெலந் தன்னில்மைந்தா மாசியினிப் படாமற்றான் தோய்த்துத்தோய்த்து மந்திரமா முதலெழுத்தின் வடிவைப்பார்த்து ஊசியின்மேற் கால்நிறுத்தித் தலைகீழாக உற்றுணர்ந்து பார்த்தவர்க்கே முத்திதானே. 30 முத்தியடா முக்கோண மறிந்தாற்சித்தி மூவிரண்டாங் கோட்டிலே முளைத்தலிங்கம் சத்தியடா மாவிடையு மானலிங்கஞ் சஞ்சார சமாதியிலே அமர்ந்தலிங்கம் பத்தியே பெரியோர்க்காய் வந்தலிங்கம் பரப்பிர்ம மாகவுந்தா னிருந்தலிங்கம் நித்தியமும் நிருவிகற்ப சமாதியாகி நிர்மலமாய் நிறைந்தெழுந்த லிங்கந்தானே. 31 போச்சடா குருவான மனதொன்றாகப் புத்திரனே நிறுத்தாட்டாற் புலன்களாலே ஏச்சடா யெழுநரகில் வீழ்வான்மைந்தா யெட்டிரண்டுந் தெரியாத கன்மத்தாலே மூச்சடா முச்சந்தி தன்னில்மாறி முழுதுமடா திருக்கூத்தைக் கண்டானானால் வாச்சடா வன்னியுந்தான் பிர்மந்தன்னில் வாடாத தீபமதாய் வளரும்பாரே. 32 பாரப்பா நான்சொன்ன இந்நூல்தன்னிற் பரிபாஷை சொல்லவில்லை மைந்தாகேளு ஆரப்பா லாடத்தில் மனந்தான்நிற்க அகிலாண்ட பிர்மாண்ட மெல்லாம்நீதான் வீரப்பா செய்யாதே யென்னைப்போலே வேல்வாங்கி அண்டவரை மேவவேணும் சாரப்பா யிந்நூலைச் சார்ந்துபாரு சார்ந்தவர்க்கே முப்பத்து மூன்றும்முற்றே. 33
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry