Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
நின்றதோர் குருவப்பா நன்றாய்க்கேளு நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக அன்றதோர் குருவினது நாவேலிங்கம் அதிகமுள்ள சீஷனது காதேயோனி சென்றதோர் குருவினுப தேசம்விந்து சிறப்புடனே கேட்கிறதோர் சீஷன்நாதம் என்றதோர் அறிவுமன மறிந்தாலின்பம் ஏகமெல்லாம் ஞானகெற்பம் பிறந்தவாறே. 74 பிறந்ததப்பா மனமதுவே அறிவிற்சேர்ந்து பேரான மவுனம்பே ரின்பமாகி யிறந்ததப்பா தேகமென்ற தோலேபோச்சு இதமான சுழலென்ற தேகமாச்சு கறந்ததப்பா கைவல்லிய பதவியாச்சு காசினியி லிதையறியார் சீடரெல்லாஞ் சிறந்ததப்பா ஐயோனி பிறப்பின்மார்க்கஞ் சேதிதனை யுன்றனக்குச் சொல்லினேனே. 75 சொல்லியதோர் குருவையா புருடனாகுந் தோத்திரமாஞ் சீடனுமே பாரியாகும் அல்லியதோர் ரவர்வார்த்தை லிங்கமாகும் அப்பனே சீடன்மனம் ஆவிடையேயாகும் மல்லியதோர் குருதானே வித்துமாகும் மகிழ்கின்ற சீடனது நிலமுமாகும் சொல்லியதோர் குருதானே விண்ணேயாகுஞ் ஜெயமுள்ள சீஷனது நிலமுமாமே. 76 நிலமறிந்து கண்டுகொண்டால் ஞானம் வாய்க்கும் நிலமறியா மூடருக்கு ஞானமேது சலமறிந்து உண்டுகொண்டாற் பிறவிபோகுஞ் சலமறியா மாட்டுக்குப் பிறவிபோமோ கலமறிந்து கைக்கொண்டாற் காட்சிகாட்டும் கலமறியா மூர்க்கருக்குக் காட்சியேது பொலமறிந்து தேகத்தைத் தள்ளிப்போட்டுப் பொன்மதியாந் தேகமதைப் பொருத்திக்கொள்ளே. 77
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry