Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
சாற்றியதோர் வாக்கதனைப் பொய்யென்றெண்ணித் தலைநெறித்துப் போகாதே சண்டிமாடே சேற்றுமத்தி லீப்போலே தியங்கிப்போவாய் ஜெகஜால நரகத்தி லழுந்திவீழ்வாய் ஆற்றுக்குள் துரும்பதுபோ லலைந்துபோவாய் அலட்சியமாய்ச் சொல்லாதே இந்தநூலை தூற்றிவிட்ட களம்போல்வங் கிஷங்கள்போகும் சுயவாக்குத் தப்பாது சூட்டினேனே. 96 சூட்டினதோர் குலந்தனிலே பெரியோரானால் சுக்கிலத்தின் வழியிருபத் தொன்றுமுத்தி கூட்டினதோர் சுரோணிதத்தின் வழியிருபத்தொன்றும் குறியாக மோக்ஷமுத்தி பெறுவாரையா நாட்டினதோர் சீஷர்களும் முத்திபெற்றார் நலமான பாதையிது அப்பாகேளு பூட்டினதோ ரடையாளம் பூரணமேயாகும் பூட்டதனைத் திறந்துபொன் மனதினாலே. 97 பொன்வெள்ளி செய்கிறவன் பெரியோனல்ல புகழான அஷ்டசித்தி பெரியோனல்ல முன்னின்ற வயித்தியனும் பெரியோனல்ல மூச்சடக்கி யெழும்பினவன் பெரியோனல்ல சின்னமுள்ள குழியிருப்போன் பெரியோனல்ல திறமுடனே கெவனமிட்டோன் பெரியோனல்ல தன்னிலையை அறிந்தவனே பெரியோனையா தனையறியான் வகைகெட்ட சண்டிமாடே 98 சண்டியென்ற மாடப்பா நூலைக்கற்றுச் சகலகலை வல்லவன்போற் பேசிக்கொள்வான் கொண்டியென்ற கோளுமிகச் செய்துகொண்டு கொலைகளவுக் கஞ்சார்க்கு ஞானமென்ன தெண்டனைசெய் கின்றோர்கள் வேதம்பார்த்துச் செகத்திலே பெரியவன்போற் புலம்பிக்கொள்வான் வண்டினங்கள் கத்துவது போலேகத்தும் மடையர்களே வுங்களுக்கு நரகந்தானே. 99 நரகமென்ற மனுப்பதரே சொல்லக்கேளாய் நன்மையுள்ள பரிபொய்யேகரியும்பொய்யே கிரகமென்ற மனைபொய்யே கிளையும்பொய்யே கெதியுள்ள சதுரங்க சேனைபொய்யே கரகமென்ற உந்தனுட சரீரம்பொய்யே கருவான பெண்டுபிள்ளை பொய்யேயாகும் துரகமென்ற ஈதெல்லாம் நிசமேயென்று தூலமகிழ்ந் திருப்பதறி யாமற்றானே.100 அரியென்ற வெழுத்ததனை அறியமாட்டார் அவனிதனி லென்னூற்குச் சரிநூலில்லை பரியென்ற வாசியீரா றுங்கடந்து பரமதிலே கலந்தவர்க்குப் பயனும்விள்ளும் வெறியென்ற மூடருக்குத் தெரியாதப்பா விரைந்தோடி நாய்போலே போகஞ்செய்வான் குறியென்ற ஞானமிது நூறினுள்ளே குருசொன்ன விபரமெல்லாங் கூறினேனே.101
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry