Back to Admin Dashboard
Sacred Portal
Update Wisdom Entry
Category / Topic
Attributed To (Quote By)
Sacred Quote
கேளப்பா வென்மகனே ஞானமூர்த்தி கேசரத்திற் சிற்றரிவு நீயுமிச்சம் வாளப்பா திரவியத்தை யீயும் வேதும் வளமான நவதானம் வழங்குவேதும் நாளப்பா தினந்தோறு மமுதுபோடல் நலமான சத்திரத்தி லன்னம்போடல் கோளப்பா திருவாசல் தாகந்தீர்த்தல் கொடியான நந்தவனங் கோடிதானே. 90 கொடியான கோதானம் வஸ்திரதானம் கொள்கையென்ற வாபரண தானமெல்லாம் படியான கலியாண தானமென்றும் பண்புள்ள கோவில்குளந் தானமென்றுங் குடியான அக்கிரார தானமென்றுங் கூறியதோர் மடங்கள்கட்டுந் தானமென்றும் முடியான நிலதானஞ் சொர்னதானம் முழக்கும்விக் கிரகபூசை யதுவும்பொய்யே. 91 பொய்யப்பா யீவதெல்லாம் வீணதாகும் புரப்பதற்குச் செய்வார்கள் தேசமாந்தர் பையப்பா சொலப்பாரில் நெல்லையிட்டால் பருவமுட னதுகாலம் நெல்லேயாகும் கையப்பா வீவதுகண் டிப்பாயீந்தால் கண்டிப்பாய் வந்திடுவா ரென்றுதோணார் மெய்யப்பா சொன்னேனின் னூலினுள்ளே விவரமதை யுந்தனுக்கு விளம்பினேனே. 92 விளம்பியதோர் செய்தியதை யறிந்துகொண்டேன் மேதினியி லீவதெல்லாம் வீணேயென்றீர் தளம்பியதோர் மனமதனைச் செயமேபண்ணிச் சச்சிதா நந்தமதிற் சார்ந்தவல்லோர் குளம்பியதோர் அறுசுவைப்பா லன்னத்தோடு கொடுத்தாக்கால் மோக்ஷமுண்டோ குறியைச்சொல்லும் கிளம்பியதோரறிவுவந்து பெரியோர்க்கையா கேட்டதெல்லாங் கொடுத்தாக்கால் கெதியுண்டாமே. 93 கெதியுண்டோ மென்றுசொன்னீ ரையாவுந்தன் கெதிகொடுக்க வாட்கொண்ட கிருபையோனே மதியுண்டாம் பெரியோர்க்குக் கொடுத்ததாலே வன்பிறவி நீங்குமோதான் வகையைச்சொல்லும் பதியுண்டாந் தேகமதைப் பொய்யென்றெண்ணிப் பஞ்சமா கருவியைநிக் கிரகஞ்செய்வார் விதியுண்டாம் பிரமாவின் லிபியைத்தள்ளி வேதாந்த முடியிலிருந் திடுநல்லோரே. 94 நல்லோர்கள் விரதமிரார் திதிகள்பண்ணார் நலமில்லாக் கற்செம்பை நமஸ்கரீயார் வல்லோர்கள் கோபமுறார் பொய்யுஞ்சொல்லார் வஞ்சனையுங் களவும்நித் திரையும்பண்ணார் பொல்லோர்க ளிடஞ்சேரார் பொய்யேவேண்டார் பொருந்திநின்ற மரப்பாவை மண்ணைவேண்டார் செல்லோர்கள் கழுத்தின்மேல் லிங்கங்கட்டார் சிவபூசை யைப்பார்க்கத் திரும்பார்பாரே. 95 திரும்பிநின்ற மனமுடையோர் மவுனியத்திற் றிசைநாதத் தொனியதனிற் சேர்நல்லோரை விரும்பிதெரி சனமுமனு தினமுஞ்செய்ய வினையில்லை மெய்ஞ்ஞானம் வந்தேதூக்கும் கரும்பினது சாரமதும் ஆவின்பாலும் கனியுளநீ ரபிஷேகம் கருதிப்பண்ணத் துரும்பென்ற பிறவிபோங் கேட்டதெல்லாம் சுத்தருக்குக் கொடுத்ததினாற் சுத்தனாமே. 96
Source Document (Quote From)
Reference Number (Verse/Page)
Extended Commentary (Description)
Reference File (Image, Video, or Doc)
Update Wisdom Entry